ஓசூருக்கு கொண்டுவரப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு ஓசூர் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து நினைவு ஜோதி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி ஸ்ரீ பெரும்புதூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நினைவு ஜோதிக்கு பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி ஓசூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதிக்கு ஓசூர் காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நினைவு ஜோதி கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நினைவு ஜோதியை டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அவரது நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.