கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாத்தகோட்டா கிராமத்தில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதாராமாஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக திருஞ்சனம் மற்றும் திருவீதி உற்சவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு இந்த கோயிலில் ஸ்ரீ சீதாராமாஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து திருமஞ்சனம் திருவீதி உற்சவங்கள் நடைபெற்றன தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர். தொடர்ந்து சரஸ்வதி பாலம் கருணா சேவா நடைபெற்றது தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.