செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் போராட்டம்

71பார்த்தது
கொல்கத்தாவில் முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை கண்டித்து இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூரில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓசூர் இந்திய மருத்துவ சங்க கிளை ஆகியோர் இணைந்து கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் ஞாயம் வேண்டியும் இன்று ஒரு நாள் அறப்போராட்டம் நடத்தினர்.

மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ஆனந்த ரெட்டி தலைமையில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் 300க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் என 600 க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று பதாகைகளை ஏந்திய படி பெண் மருத்துவ மாணவியின் கொலைக்கு நியாயம் வேண்டியும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் கண்டன கோஷத்தை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தை ஒட்டி இன்று ஒரு நாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சேவை நிறுத்தப்பட்டன. அவசர சிகிச்சை சேவை மட்டுமே வழக்கு போல் செயல்பட்டது.

தொடர்புடைய செய்தி