கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்ன ரெட்டியபட்டி பகுதியில் உள்ள எஸ்கேசி பாரில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் மது விற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு 65, கோபால் 43, பூசன் 48 தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் 41 ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 1320, 4 செல்போன்கள் மற்றும் 196 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.