கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு திருக்காம்புலியூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2- பேரை ஹால் டிக்கெட் வரவில்லை என ஆசிரியர்கள் தேர்வு எழுத வேண்டாம் என கட்டாயப்படுத்தி, தேர்வுக்கு சென்ற மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்துள்ளனர்.
பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறையும் என ஆசிரியர்கள் இது போல் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஆங்கில தேர்வு எழுத வந்தவர்களை ஆங்கில ஆசிரியை தேர்வு எழுத விடாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் உங்களது பையன் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற மாட்டான் என தெரிவித்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த பிறகு , மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்கிறோம் என தெரிவித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும்போது, 2 மாணவர்கள் ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வந்தனர்.
தொடர்ந்து விடுமுறையில் இருந்துள்ளனர். அனைவருக்கும் நாங்கள் ஹால் டிக்கெட் தேர்வு மையத்திற்கு அனுப்பி உள்ளோம். தேர்விற்கு வந்தார்களா என தெரியாது என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தற்போது அந்த 2- மாணவர்களும் தேர்வு எழுத சென்றனர்.
இந்நிலையில் அந்த 2- மாணவர்களும் தமிழ் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.