கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகளால் உயரும் வெப்பநிலை. ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளால் வெப்பக்கதிர்வீச்சு ஏற்பட்டு ஐந்து டிகிரி செல்சியஸ்வரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுகிறது. குவாரிகளில் கிரானைட் கற்கள், ஜல்லிக்கற்கள், சுண்ணாம்பு கற்கள், மேக்னசைட், சாதாரண கற்கள் என பலதரப்பட்ட கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.
அதிக அளவில் குவாரிகள் செயல்படுவதால் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தின் வெப்பநிலை 5- முதல் 6- டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று 100. 4 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. நேற்று முன்தினம் 102. 2 டிகிரி பதிவு ஆனது. கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பே 2- முதல் 3- டிகிரி செல்சியஸ் அதிகம் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
குவாரிகளில் வெடிவைத்து தகர்ப்பதால், கார்பன்-டை-ஆக்சைடு வாயு சதவீதம் காற்றில் பெருமளவில் பெருகி வருகிறது. மணல் பரப்பை அகற்றி பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாறைகளில் சூரிய ஒளி பட்டு எதிரொலிக்கும் போது, வெப்பநிலை கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.