வேட்டமங்கலத்தில் 141வது தீயணைப்போர் பயிற்சி துவக்க விழா.

58பார்த்தது
வேட்டமங்கலத்தில் 141வது தீயணைப்போர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 600 மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், கரூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் தற்காலிக பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கரூர் வேட்டமங்கலம் கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள தற்காலிக தீயணைப்பு பயிற்சி மையத்தில் 97 தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவங்கியது.

திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் க. குமார் பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது, பயிற்சி பெறும் தீயணைப்பு வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி மூச்சுப் பயிற்சி மற்றும் தீயணைப்பு கருவிகளை கையாளுவது குறித்து அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அடிப்படை பயிற்சி முடிந்து தேர்வு நடத்தப்பட்டு நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், பயிற்சி காலத்தின் போது, ஒழுக்கம் , கண்ணியம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பயிற்சி மையத்தில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது. செல்போன்களை அவசியம் கருதினால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் உதவி அலுவலர்கள் கோமதி, திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி