
வரதட்சணையை திருப்பிக்கொடுத்த மாப்பிள்ளை
ராஜஸ்தானில் திருமணத்தின் போது மணமகள் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த ரூ.5,50,000 பணத்தை அவர்களிடமே திருப்பி அளித்த மணமகன் பரம்வீர் ரத்தோர் அவர்களிடமிருந்து வெறும் 1 ரூபாயையும், ஒரு தேங்காயையும் ஏற்றுக்கொண்டார். "படித்தவர்களே இதுபோன்ற செயலை செய்யாவிட்டால், வேறு யார் வந்து இதனை மாற்றுவார்கள். நாம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்" என பரம்வீர் தெரிவித்துள்ளார்.