கன்னியாகுமரி - Kanyakumari

விளவங்கோடு |

சிராயன்குழி: சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசும் பாசன கால்வாய்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிராயன் குழி சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அடிப்பகுதி வழியாக பட்டணம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. இந்த கால்வாய் ஒரமாக அருட்திரு லோலசிங் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏராளம் வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.          கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலையோரமாக செல்லும் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்தன. ஆனால் கால்வாய் புதர்கள், மரங்களை மட்டும் அகற்றிவிட்டு, கால்வாய் தூர்வாரப்பட வில்லை என கூறப்படுகிறது.      இதனால் தற்போது கடும் மழை காரணமாக  அந்த கால்வாயில் வீடுகளில் உள்ள சாக்கடை நீர்கள், கழிவு பொருட்கள்  தேங்கி, பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. சம்மந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு