நாங்கள் சொல்லும்போதே அண்ணன் செங்கோட்டையன் நல்ல முடிவை எடுத்திருந்தால் இன்று எடப்பாடி பழனிசாமி என்பவரே இருந்திருக்க மாட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளர் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கூறியுள்ளது அதிமுகவில் பூகாம்பத்தை கிளப்பியுள்ளது. மேலும் அவர், இப்போது கூட காலம் கடக்கவில்லை. எல்லோரும் ஒருங்கிணைவோம். இணைந்தால் அதிமுக வெற்றிபெறும், சேராவிட்டால் அதிமுக இருக்காது என்று கூறியுள்ளார்.