அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த அவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவரின் மூலம் 33 பேரிடம் ரூ. 3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.