ரூ.2,151 கோடி கிடைக்கும் வரை தமிழக அரசு போராடும். 43 லட்சம் குழந்தைகளின் தலையில், வயிற்றில் அடிக்காதீர்கள் என சென்னையில் திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியுள்ளார். மேலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக திமுக அரசு மீது மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. மாநில கல்விக்குழு விவாதித்து அதன் பிறகே கையொப்பம் இடுவோம் என்று தெளிவாக கூறினோம் என தெரிவித்துள்ளார்.