உ.பி: திருமணத்தில் உணவு சரியில்லை எனக் கூறிய இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன் நகரில் நடந்த திருமணத்தில் 'உணவு ருசியாக இல்லை. சரியாக வேகவில்லை' என மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் கூறியுள்ளார். இதனால், இருவீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மணமகளின் மாமா விஜயகுமார், அருணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து, விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.