உத்தரப் பிரதேசம்: மகள் வரைந்த ஓவியத்தால் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஜான்சியில் வசித்து வந்த சோனாலி(27) என்ற பெண் திங்களன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதனிடையே சோனாலியின் 4 வயது மகள், தனது தந்தையே தாயின் கொலைக்கு காரணம் என்பதை ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார். இதனடிப்படையில் போலீசார் சோனாலியின் கணவன் சந்தீப்பை கைது செய்தனர். வரதட்சணை கொடுமையே என் மகளின் சாவுக்கு காரணம் என சோனாலியின் தந்தை குற்றம்சாட்டினார்.