மும்மொழிக் கொள்கைக்கு எதிரானப் போராட்டத்தில் இணைந்து போராட அதிமுகவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய உதயநிதி, “அண்ணா பெயரை வைத்துக்கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள். எங்களோடு வீதிக்கு வாருங்கள். இது திமுகவுக்கான பிரச்னை கிடையாது. மாணவர்களுக்கான போராட்டம். தமிழுக்கான போராட்டம்” என்று கூறியுள்ளார்.