தனக்கு சகோதரிகள் இருக்கும் நிலையில் தன்னை மச்சான் என அழைத்த நண்பனை சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அருண் என்பவர் கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் அருணுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபரில், நண்பரான காரனோடையைச் சேர்ந்த விஜயகுமாரை தனது வீட்டுக்கு அழைத்த அருண், அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.