வேலூரில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தை மது போதையில் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ரவிச்சந்திரன் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.