திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன் (27), ஸ்டானின் (24) ஆகியோர் கடந்த மாதம் 19ஆம் தேதி வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். ஸ்டாலின் வீட்டின் அருகே ஆயில்சேரியிலும், அண்ணன் இரட்டைமலை சீனிவாசன் ஆவடி பகுதியிலும் என தனித்தனியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இரட்டை கொலையின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.