தமிழக கிராமங்களில் பொதுவாக பேய் பிடித்துவிட்டதாக கூறி பேய் ஓட்டுபவரை அழைத்து வந்து வேப்பிலை அடித்து அந்த பேயை ஓட்டுவார்கள் என்பதை பார்த்திருப்போம். அந்த வகையில், திருத்தணியில் பெண்ணுக்குள் ஆண் பேய் இருப்பதாகக் கூறி பெண்ணை நடுவீதியில் அமர வைத்து அவருக்கு பீர், சிகரெட், மது பணம், சிக்கன் பிரியாணி ஆகியவற்றை படைத்தது சாமியார் ஒருவர் பேய் ஓட்டினார். அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் இதனை கண்டு பீதியில் பயந்து ஓட்டம் பிடித்தனர்.