ம.பி: பிந்த் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது லாரி ஒன்று திடீரென மோதியது. இக்கோர விபத்தில், 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.