CBSE -10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகளை நடத்து வது குறித்து விரைவில் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீர்திருத்தம் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய விதிகளை செயல்படுத்துவதில் மற்றொரு முக்கியமான படியாகும் என தெரிவித்துள்ளார்.