ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் ஒதுக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். இதனால் 5.18 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.