முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? என மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியுள்ளார். மேலும், உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் என கூறியுள்ளார்.