சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்கும் வாய்ப்புள்ளது. விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சொந்தமாக சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார். சில அரசியல் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 மொழியில்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என கூறியுள்ளார்.