இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 61 வயதான ஞானேஷ்குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஞானேஷ்குமாருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு தேர்தல் ஆணையர் பதவிக்கு விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டார்.