மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள ஒரு வீட்டின் மாடியில், ஆடுகள் வெட்டப்படுவதாக வீடியோ பரவிய நிலையில், அருள்வாக்கு சொல்லும் சிவராமன் என்பவர், பக்தர்கள் தன்னிடம் நேர்த்திக்கடனாக கொடுத்த 2 ஆடுகளை மாடியில் பலி கொடுத்து, அப்பகுதியினருக்கு அன்னதானம் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் அருகே மாடுகள் பலியிடப்படுகிறது என எக்ஸ் வலைத்தளத்தில் இந்த வீடியோ பரவியது. இது முற்றிலும் தவறு என TN Fact Check விளக்கம் கொடுத்துள்ளது.