மணல் எடுக்க எதிர்ப்பு பல்வேறு சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் அரிய வகை மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கலிங்கராஜபுரத்தில் பல்வேறு சமுதாயத்தினர் நேற்று (27-ம் தேதி) மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

       ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து இந்த அரிய வகை மணல் எடுக்க உள்ளதால்  இதற்கு அப்பகுதியினர  எதிர்ப்பு தெரிவித்து கலிங்கராஜபுரம் கிருஷ்ணசாமி கோவில் வளாகத்தில் வைத்து பல்வேறு சமுதாயத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

      ஆர்ப்பாட்டத்திற்கு இந்து தண்டான் சமுதாய தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இந்து அரையர் சமுதாயத் தலைவர் நாகராஜன், சமத்துவபுரம்  ஊர் கமிட்டி தலைவர் சினேவி,   பூத்துறை ஜமாத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், இந்து சேமரமர் சமுதாயத் தலைவர் சிபு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

       சிறப்பு விருந்தினராக ராஜேஷ் குமார் எம் எல் ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தூத்தூர் பங்கு பணியாளர் சாலமன் , இரயுமந்துறை பங்கு பணியாளர் சூசை அண்டனி உட்பட பலர் பேசினார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி