கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையோர பகுதி மணலில் இருந்து கனிமம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ தலைமையில் நேற்று (26-ம் தேதி) கலெக்டரை சந்தித்து மனு அளித்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறியதாவது: -
மனவளக்குறிச்சி அரிய வகை மணல் ஆலை நிறுவன பிரச்சனை தொடர்பாக நாங்கள் கலெக்டரிடம் விவாதித்தோம். அப்போது கலெக்டர் எங்களுக்கு உத்தரவத்தை தந்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் மக்கள் கருத்துக்களை உள்வாங்காமல் எந்த நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற உறுதியை தந்துள்ளார். நாங்கள் சில விஷயத்தை அவர் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
இந்த விவாகரத்தில் மத தலைவர்கள் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் உட்பட பலர் உடனிருந்தனர்.