சாலையில் மரண குழி சீரமைப்பு; லோக்கல் ஆப் செய்தி எதிரொலி

61பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தேங்காபட்டணம் - கருங்கல் சாலையின் இனயம் திருப்பு என்ற பகுதியிலிருந்து இனயம் கடற்கரை கிராமங்களுக்கும் ஒரு சாலை திரும்பி செல்கிறது. இந்த நிலையில் இனயம் திருப்பு மெயின் சாலை பகுதியில் சாலையில் மரண பள்ளம் ஒன்று ஏற்பட்டது. மேலும் அந்த குழியிலிருந்து சிதறும் சல்லிகளால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அமத்சியா, செல்வின், நித்தின் உள்ளிட்டோர்  (செப். , 13) இரவு அந்த சாலையில் சிதறி கிடந்த சல்லிகளை சுயமாக அகற்றி சாலையை சுத்தப்படுத்தி,   அபாய குழியை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த செய்தி லோக்கல் ஆப்பில் வைரலானது. இதையடுத்து கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் அந்த வாலிபர்களை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் கடந்த  19-ம் தேதி இரவு சாலையை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட லோக்கல் ஆப் நிறுவனத்திற்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி