மணல் ஆலை காங்கிரஸ் போராடலாமா? -முன்னாள் மத்திய அமைச்சர்

55பார்த்தது
நாகர்கோவில் வட சேரியில் பா. ஜ. க வின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை இன்று (25-ம் தேதி)  முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.   அப்போது அவர்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது: -
      1965 ஆம் ஆண்டு மணவாள குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான அபூர்வ மணல் ஆலை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது இளைஞர்களுக்கும் மீனவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் மணல் ஆலையின் விரிவாக்க திட்டத்திற்கு அதே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் களம் இறங்கி வருவது வேடிக்கையாக உள்ளது.  
இந்த மணல் ஆலையில் 75% பேர்கள் மீனவர்கள் தான் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்களை தூண்டி விட்டு மத தலைவர்களும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சூழ்ச்சி செய்து வருகின்றனர்.  
    மணல் ஆலையால் புற்று நோய் மக்களுக்கு ஏற்படும் என பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அந்த ஆலையில் நேரிடையாக பணியாற்றும் ஊழியர்களுக்கு புற்று நோய் வரவில்லை என விளக்கம் கூறினார்.
     சில ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் மத்திய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டு வந்த துறைமுக திட்டத்தையும் எதிர்த்து இல்லாமல் செய்தார்கள். என பல்வேறு குற்றசாட்டுகளை பொன். ராதா கிருஷ்ணன் முன் வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி