கிள்ளியூர் - Killiyur

குருவிக்காடு அந்தோணியார் ஆலய பீடம் அர்ச்சிப்பு விழா நடந்தது

திருவட்டார் அருகே திருவரம்பு - குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதுகாவலர் திருவிழா கொடியேற்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட பீடம் அர்ச்சிப்பு விழா ஆகியன இன்று நடந்தது. இன்று மாலை குருவிக்காடு சந்திப்பில் பாளையங்கோட்டை மேனாள் ஆயர் ஜூடு பால்ராஜ்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடினர். தொடர்ந்து பாதுகாவலர் விழாவுக்காக திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் புதுப்பிக்கப்பட்ட பீடம் அர்சிப்பு விழா நடந்தது. புத்தன்கடை வட்டார முதல்வர் பேரருட்பணியாளர் எல். பென்னி, குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய பங்கு அருட்பணி பேரவை தலைவர் அருட்பணியாளர் எ. ஒய்சிலின் சேவியர், துணைத் தலைவர் ஏ. எம். மெற்றில்டா சதீஷ்குமார் , செயலர் ஏ. எல். மேரி ரெஜினாள், பொருளர் ஏ. மைக்கேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மற்றும் முன்னாள் பங்கு அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணிப்பேரவை, கட்டடக்குழு அன்பியங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். விழாவில் அழகியமண்டபம் அனுகிரஹா தொண்டு நிறுவன தலைவர் ஏ. சதீஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 5ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. 5-ம் தேதி அருளுரையுடன் திருப்பலிக்கொண்டாட்டம் மதியம் 12. 30 மணிக்கு திருத்தேர் பவனி, கொடியிறக்குதல் ஆகியன நடைபெறுகிறது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా