இறைச்சி கழிவுளுடன் வந்த டெம்போவுக்கு ரூ. 20 ஆயிரம்  அபராதம்

71பார்த்தது
கேரளாவில் இருந்து குமரி -  கேரளா எல்லை சோதனை சாவடிகள் வழியாக மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்வது வழக்கமாக உள்ளது.   பல பகுதிகளில் கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம்  ஒப்படைத்தும் வருகின்றனர்.  

ஆனாலும் நள்ளிரவு நேரங்களில் கூண்டு கட்டிய வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து குமரியில் கொட்டி விட்டு செல்ல அவலம் நடந்து வருகிறது.

       இந்நிலையில் நேற்று இரவு இறைச்சிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு களியக்காவிளை வழியாக ஒரு டெம்போ வந்தது. இதில் துர்நாற்றம் வீசியதால் அப்பொழுது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வாகனத்தை துரத்தி குழித்துறை பழைய பாலத்தின் அருகில் வைத்து மடக்கி பிடித்தனர்.

       தொடர்ந்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் சென்ற குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் நகர்மன்ற தலைவர் பொன்.   ஆசைத்தம்பி உட்பட அதிகாரிகள் டெம்போவை பறிமுதல் செய்து ரூ. 20 ஆயிரம்  அபராதம் விதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி