கிள்ளியூர் - Killiyur

சுவாமியார்மடம்:  பைக் - கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

சுவாமியார்மடம்:  பைக் - கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பையாஸ் (28). அதே பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (27). இவர்கள் இருவரும் நேற்று இரவு ஒரு பைக்கில் அழகிய மண்டபத்திலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அப்போது சுவாமியார்மடம் பகுதியில் வந்த போது திருவனந்தபுரத்திலிருந்து அழகியமண்டபம் நோக்கி சென்ற கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து பையாஸ், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். காரில் வந்த மணலிகரை என்ற இடத்தை சேர்ந்த குடும்பத்தினரும் காயங்கள் இன்றி தப்பினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இரண்டு வாலிபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా