கருங்கல் அருகே மீன் கழிவுகளுடன் வந்த லாரி சிறை பிடிப்பு

81பார்த்தது
கேரள மாநிலத்திலிருந்து மீன் மற்றும் இறைச்சி கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து குமரி மாவட்ட எல்லை பகுதிகளில் கொட்டி விட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக புகார் உள்ளது.
      இந்த நிலையில் நேற்று (19-ம் தேதி) மாலையில் ஒரு கண்டெய்னர் லாரி கருங்கல் அருகே உள்ள பாலூர்  சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் அந்த லாரியை மடக்கி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

      இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடம்  வந்த கருங்கல் போலீசார் மற்றும் கிள்ளியூர் வட்டார சுகாதார அலுவலர்கள்  பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பாலூர் ஊராட்சி சார்பில் அதிகாரிகள் லாரி டிரைவருக்கு ரூபாய் 25 ஆயிரம்  அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கி தொகை வசூல் செய்தனர்.

      இதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அந்த லாரி போலீசார் உதவியுடன் ஊராட்சி ஊழியர்கள் களியக்காவிளை  பகுதிக்கு கொண்டு சென்று கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி