கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் மறியல்  100 பேர் கைது

82பார்த்தது
சென்னையில் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாரபட்சமற்ற நியாயமான ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் நல சட்டப்படியான உரிமைகள் நிலைநாட்ட வேண்டும், தொழிற்சங்க சட்டபடி தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் உரிமை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
       இதற்கு ஆதரவு தெரிவித்து   நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ( 1 -ம் தேதி)  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
       தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு காவல் துறையை ஏவி மிரட்டும் பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கு போராட்டத்தின் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி