புதுக்கடை அருகே அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள், புத்தகப்பை, புத்தகம், சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (8-ம் தேதி) நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மேரி வசந்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் மற்றும் புத்தகப்பை, புத்தகம், சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.