பூத்துறை மீனவ கிராம மக்கள் தபால் அனுப்பும் போராட்டம்

61பார்த்தது
மணவாள குறிச்சி ஐஆர் இ என்ற மத்திய அரசு நிறுவனம் சார்பில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து அரியவகை கனிம மணலை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மிடாலம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 1144 ஹெக்டர் நிலப்பரப்பில் இருக்கும் கனிம மணலை எடுப்பதற்காக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை கண்டித்து மீனவ கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கருத்து கேட்பு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நிரந்தரமாக கைவிடக் கோரியும், மணல் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராம மக்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு முதலமைச்சர் தனிப்பிரிவு, நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்று (26-ம் தேதி) பிற்பகல் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி