நீரோடி சர்ச் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து மணவாளகுறிச்சி அரிய வகை மணல் ஆலைக்காக 1144 ஏக்கர் நிலப்பரப்பில் தாது மணல் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மத்திய மாநில அரசுகளின் இந்த திட்டத்துக்கு மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

         குறிப்பாக கடற்கரை கிராமங்கள் தோறும் தினமும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (30-ம் தேதி)  காலை 11 மணியளவில் நீரோடி கடற்கரை கிராமத்தில் உள்ள ஆலய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

        ஆர்ப்பாட்டத்திற்கு ஆலய அருட்பணியாளர் கிளிட்டஸ் தலைமை வகித்தார். மற்றும் ஆலய நிர்வாகிகள், விசைப்படகு சங்க  நிர்வாகிகள் குடும்பமாக ஆண்கள் பெண்கள் என ஏராளம் பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச மீனவர் அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி சிறப்புரையாற்றினார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி