டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனான ரத்தன் டாடா 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார். 1991 முதல் 2012 வரை 21 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போது அவரின் தலைமையின் கீழே குழுமத்தின் லாபம் 50 மடங்கு அதிகரித்தது.