சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை எம் எல் ஏ - க்கள் அறிவிப்பு

74பார்த்தது
மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐ ஆர் இ மணல் ஆலையிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144 ஹெக்டேர் நிலங்கள் குத்தகை எடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியதாக வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமையில் புதுக்கடையில் நேற்று (23-ம் தேதி) இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட மீனவ காங்கிரஸ் தலைவர் ஜெரோம் வரவேற்றார். கூட்டத்தில் கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராஜேஷ் குமார் எம்எல்ஏ பேசுகையில்: - குமரி மண்ணிலிருந்து மணல் எடுக்கும் பணியை அனுமதிக்க கூடாது என்பதை நாம் சட்டசபையில் பதிவு செய்தேன்.
எந்தவிதமான ஆய்வுகளும் செய்யாமல் திடீரென அக்டோபர் ஒன்றாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறாவதாக அறிவித்துள்ளனர். இன்று (24-ம் தேதி) நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். ரத்து செய்யப்படவில்லை என்றால் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் 1-ம் தேதி அன்று பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவிலான முற்றுகை போராட்டம் நடத்துவோம். என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி