நித்திரவிளை: பள்ளிக்கூடம் அருகே புகையிலை பதுக்கிய பெண் கைது

56பார்த்தது
நித்திரவிளை: பள்ளிக்கூடம் அருகே புகையிலை பதுக்கிய பெண் கைது
நித்திரவிளை அருகே சாத்தான்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி உட்பட சுற்றுவட்டார பகுதியில் ஒரு கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட கடையை சோதனை இட்டனர்.

அப்போது குட்கா புகையிலை பொருட்கள் அந்த கடையில் இல்லாமல் இருந்தது. இதையடுத்து கடையின் பின்பகுதியில் சோதனை செய்தபோது, 6 பண்டல்களில் 90 பாக்கெட் குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் சாத்தங்கோடு அஞ்சுமலைப்பாடு பகுதியை சேர்ந்த மணிமேகலை (48) என்பவரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமினில்  விடுவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி