கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரைகளுக்கு அடுத்தபடியாக திற்பரப்பு அறிவியல் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு தண்ணீர் கொட்டுவதால் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகம் கொட்ட தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வுக்கு பின் பள்ளி விடுமுறை என்பதாலும், நவராத்திரி சீசன் என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இன்று ( 4-ம் தேதி) காலையில் சாரல் மழை பெய்த பின்பும், அருவியல் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய துவங்கினர். அதுபோன்று சிறுவர் நீச்சல் குளத்திலும், அணையின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பனையில் படகு சவாரியும் தற்போது களை கட்டி உள்ளது.