விளவங்கோடு - Vilavengodu

இனி அவள் வரமாட்டாள்; பெற்றோரை கதி கலங்க செய்த காதலன்

இனி அவள் வரமாட்டாள்; பெற்றோரை கதி கலங்க செய்த காதலன்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோணங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர்  நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது அவர் தக்கலை அடுத்த  புலியூர் குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து, அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் அதே தினம் மதியம் 1: 30 மணி அளவில் மாணவியின் தாயாருக்கு செல் போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், நான் குளச்சல் கோணங்காடு பகுதியை சேர்ந்த ஜெப்ரி என்றும் ஒரு கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், உங்கள் மகளை நான் அழைத்து செல்கிறேன். அவளை நான் காதலிக்கிறேன். இனி அவள் வரமாட்டாள் என தெரிவித்து விட்டு போனை துண்டித்துள்ளார். அதன் பின்னர் அதே நம்பரில் பல முறை தொடர்பு கொண்ட போதும் போன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக மாணவியின் தாயார்  மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் கொடுத்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా