குமரி ஆணழகனுக்கு உற்சாக வரவேற்பு

52பார்த்தது
இந்தோனேஷியா நாட்டில் ஆசிய அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரிய ஜிஜோ என்ற வாலிபர் 80 கிலோ பிரிவில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார் போட்டியில் வெற்றி பெற்ற பின் தனது சொந்த ஊரான தூத்தூர் பகுதிக்கு சுதந்திர தின நாளில் வருகை தந்த தங்க மகனை ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மேள தாளங்கள் முழங்க தேச தலைவர்கள் போல் வேடமணிந்த சிறுவர்களை முன்னிறுத்தி வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்து வந்து தூத்தூர் நேதாஜி நற்பணி மன்ற வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி