குலசேகரத்திலிருந்து இன்று (செப்.,2) காலை அரசு பஸ் ஒன்று மார்த்தாண்டத்தை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சுமார் 7 மணியளவில் பஸ் மாத்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை என்ற இடத்தில் வரும் போது, குலசேகரம் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியும் பஸ்சும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரமானதால் பஸ்சில் குறைவான பயணிகளே காணப்பட்டனர். இதனால் பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை. சம்பவம் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் விரைந்து சென்று, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.