திருவட்டார் கோவில் செல்லும் சாலை சேதம்:   சீரமைக்க கோரிக்கை

59பார்த்தது
திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற  இந்த கோவில் 418 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை ஒட்டி இந்த ஆலயத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

      இந்த நிலையில் இந்த கோயிலுக்கு செல்லும் நான்கு முக்கு பகுதியில் இருந்து கோவிலின் கிழக்கு வாசல் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து குண்டு குழியுமாயாகி தற்போதைய மழையில் மழை தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஆலம்  செல்லும் பக்தர்கள் வரும் அவதிப்படுகின்றனர்.

      ஏற்கனவே இந்த ஆலயத்திற்கு செல்வதற்காக ஆலயம் சுற்றிலும்  பல்வேறு சாலைகள் உள்ளன. அனைத்தும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக புகார்கள் உள்ளது குறிப்பிட தகுந்ததாகும். எனவே கோவிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி