தற்காலிக சாலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ

55பார்த்தது
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், சம்மந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அமைச்சர் வேலு இன்று ( 4-ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தர உள்ளார். இதனால் மார்த்தாண்டம் பகுதியில் அவசரக் கதியில் நேற்று(செப்.3) சாலை பணி நடந்தது. இதை பார்வையிட்ட புழங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை காட்பாடி எந்த பணியும் தற்காலிகமாக செய்யக்கூடாது அமைச்சர் பார்வையிட்டு நிரந்தரமாக நடவடிக்கை வேண்டும் என்று பணியை நிறுத்தி வைத்தார்.

      இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும்  மார்த்தாண்டம் பகுதியில் குண்டு குழிகள் பொக்லைன் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டது. இதை அறிந்த தாரகை கத்பட் எம் எல் ஏ சம்பவ இடம் வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து சீரமைப்பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் டெம்போவை தொழிலாளர்கள் எடுத்து சென்றனர். இது குறித்து  எம் எல் ஏ கூறுகையில்: - 

இந்த ரோட்டின் நிலைமை படு மோசமாக உள்ளது. இதனால் சட்டசபையில் முதல் கேள்வியாக எழுப்பி அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றேன். தற்போது தற்காலிகமாக இரவோடு இரவாக மண் போட்டு நிரப்ப முடிவு செய்தனர். இது ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காது அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி