முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80- வது பிறந்த நாள் விழா இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குழித்துறை சந்திப்பு பகுதியில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை காத்பட் தலைமை வகித்தார். குழித்துறையில் தொடங்கிய ஊர்வலம் கோர்ட் சந்திப்பு வழியாக கழுவன் திட்டை சந்திப்பு சென்றது. தொடர்ந்து அங்குள்ள ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.