குமரி மாவட்டத்தில் இன்று கன மழை; இயல்பு வாழ்கை பாதிப்பு

68பார்த்தது
கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை மற்றும் கடலில் சூறாவளி காற்று வீசும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று (ஆக.,30) காலை முதல் கனமழை பெய்தது.

குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான  மார்த்தாண்டம், கிள்ளியூர், குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை நேரத்தில் தொடர் மழை பெய்ததால், பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தும் பள்ளி, கல்லூரிக்கு சென்றனர்.

மேலும் கூலித் தொழிலாளர்கள் கன மழையால் மிகவும் பாதிப்படைந்தனர். சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி