விநாயகர் சதுர்த்தி விடுமுறை; திற்பரப்பில் சுற்றுலா பயணிகள்

72பார்த்தது
இன்று (7-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். திருப்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து சுற்றுலா பயணிகள் தங்களுடைய விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொடர் விடுமுறையை தங்கள் உறவுகளோடு கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளதால் திற்பரப்பு அருவி பகுதி தற்போது களைகட்டி உள்ளது. தொடர்ந்து நாளையும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி